Essex Tamil Society - எசெக்ஸ் தமிழ்க் கழகம்
  • Home
    • About Us
  • Coming Up Events
  • TAMIL SCHOOL
  • Fine Arts
  • Yoga
  • Contact Us



Essex Tamil Society - History

Essex Tamil Society formed in 1999 with twelve executive members and three lifetime trustees. Under the umbrella organisation of Essex Tamil Society there are many divisions. The main goal of the organisation is to teach the mother tongue and teach our Tamil Culture to the younger generation who fled from the Sri Lankan ethnic war.         

The main section of the Society is the Tamil School which is called Essex Tamil Academy. This was formed on Friday 6th March 1999 at Downshall Education Centre in the name of Essex Tamil Academy a Tamil school was founded. Starting off with six children Essex Tamil Academy has become a huge success with a large number of pupils approximately 450 pupils. At the start Mrs Uma Jeyakumar was teaching alone with Mrs Skanthamoorthy’s assistance, but as more students came throughout the years, with different abilities the number of teachers increased and today has roughly fifteen well-trained and qualified teachers to teach our mother tongue, Tamil. The Head Teacher of Essex Tamil Academy is Mrs Uma Jeyakumar. She is a well-trained and graduated teacher and she taught many years in Sri Lanka and in the United Kingdom in school with the National Curriculum as a teaching assistant. Teaching not only Tamil language but also teach cultural subjects such as Bharathanatiyam (A Tamil Classical Dance). More instrumental teachers joined as there are classes for Miruthangam (an Indian percussion), Violin (Carnatic), Keyboard (Carnatic). These teachers are well-known in the United Kingdom and Europe for their talent. In 2001 Essex Tamil Academy was the first Tamil School in England to teach and prepare children for international Tamil examinations. This test occurs once a year in the middle of the year mostly in May or June. After a few years passed, more pupils came to know this Tamil School and joined. Before 2009, every year there would be a Kalai Vizha (A Cultural Event). Pupils would present programs on the special day.

In 2010 Essex Tamil Society formed another section which is Yoga Classes for parents who came to drop off their pupils and it is free of charge. A professional Yoga Teacher named Mr Raj Singaravelou who conducts the Yoga classes. Yoga is to motivate the parents into a physical, mental, and spiritual discipline.

The third section is for Sports and Athletic activities. Moreover every year there would be a Sports Day. In Sports Day there are four houses (teams). These four teams are green house, red house, blue house and yellow house. Only in 2010 there was a new house called Blue House for the reason of the growth of the number of pupils. During the June to July period to influence the younger generation into sports and athletic activities. 

Essex Tamil Society run a bimonthly newsletter called Chalaram. This contains local news and school activities. Moreover the newsletter contains a specially Kids Section for the Tamil School children. They can actively participate in the competitions. The Chalaram encourages children to write more poems, stories and etc. Mr K Jeyakumar and Master Ajanthan Jeyakumar are on the editorial board.   To view the Chalaram newsletters, please view the Chalaram page on this website. 

In March 2012 Essex Tamil Society inaugurated a mobile library system among the Tamil School children and the parents. This is the first Tamil School which is running the mobile library system in England. This encourages the younger children to read and understand Tamil from the age of six.

எசெக்ஸ் தமிழ்க் கழகம் - வரலாறு

 எசெக்ஸ் தமிழ்க் கழகத்தால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலையான எசெக்ஸ் தமிழ்க் அக்கடமி 1999ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்ப் பாடசாலை Downshall Education Centre இல் நடாத்தப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் ஐந்து பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தமிழ்ப் பாடசாலை படிப்படியாக பிள்ளைகளின் எண்ணிக்கை கூடியும் குறைந்தும் வந்து கொண்டிருந்தது. இப்பாடசாலையை திருமதி உமா ஜெயக்குமார் அவர்களே தனிப்பட ஆரம்பித்துத் தமிழ்ப் பாடசாலைக்கான மாதாந்த வாடகை மற்றும் வேறு செலவுகளைத் தானே பொறுப்பெடுத்து நடத்திவந்தார். இருந்தாலும் ஆரம்பத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததனால் பாடசாலை வருமானத்திலும் விட செலவினும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

அந்தச் சந்தர்ப்பத்திலேயே எசெக்ஸ் தமிழ்க் கழகம் என்ற ஓர் சமூக நிறுவனத்தை தொடக்கி அதன் ஓர் அங்கமாக இந்த எசெக்ஸ் தமிழ் அக்கடமி இயங்க ஆரம்பித்தது. இந்த எசெக்ஸ் தமிழ்க் கழகம் பன்னிரண்டு அங்கத்தவர்களைக் கொண்ட நிறுவனமாக இயங்கி வருகின்றது.

இன்று எசெக்ஸ் தமிழ்க் கழகம்  வேரூன்றி வளர்கின்றது. கழகத்தால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலையில் சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் எமது தாய்மொழியாம் தமிழையும் எமது கலைப் பாடங்களான பரதநாட்டியம், மிருதங்கம், கர்நாடக வயலின், பன்னிசை, கர்நாடக Keyboard, மற்றும் சமயங்களான சைவசமயம், கறீத்துவசமயம் அனைத்தையும் கற்று வருகிறார்கள்.

தமிழ் வகுப்புக்கள் மாணவ மாணவியர்களின் தமிழறிவிற்கு ஏற்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டு மொத்தம் பதினைந்து வகுப்புக்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வகுப்பும் முப்பது மாணவர்களைக் கொண்டது. மாதந்தோறும் வகுப்புக்களில் பரீட்சைகள் வைக்கப்பட்டு மாணவர்களின் நிலை கண்டறிந்து அவர்களுக்கான மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் ஆசிரியர்கள் மட்டுமல்லாது ஏனைய கலைப்பாட ஆசிரிய ஆசிரியைகளும் இலண்டனில் மட்டுமல்லாது ஐரோப்பிய ரீதியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வகுப்புக்கள் அனைத்தும் அனைத்துலக ரீதியில் இடம் பெறும் பரீட்சைக்கான பாடத்திட்டத்திற்கமைய “தமிழ்வழி” நூல்களை அடிப்படையாக வைத்து நடாத்தப்படுகின்றன. G.C.E வகுப்புக்கள் Cambridge University பாடத்திட்டத்திற்கமைய பயிற்றுவிக்கப்படுகின்றன. எமது தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் G.C.E Cambridge University பரீட்சையில் அதிவிசேட சித்தியான A* சித்தியடைந்து வருவது பலரும் அறிந்த உண்மை. இவ்வகுப்புக்கள் (G.C.E) ஒவ்வொரு சனிக்கிழமையும் Caterham High School இல் நடைபெறுகின்றன.


எமது கழகத்தால் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் நான்கு இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு இல்லங்களுக்கு இவையேயான விளையாட்டுப் போட்டிகள் Ilford இலுள்ள Cricklefields Athletic Stadium இல் ஒவ்வொரு ஆண்டும் துரநெஃதுரடல மாதங்களில் நடைபெற்று வருகின்றன. இல்லங்கள் முறையே பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என இல்லங்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் அணி வகுப்புக்களுடன் காலை ஆரம்பமாகி மாலை பெற்றோர்கள் பார்வையாளர்களுக்கான போட்டிகளுடன் நிறைவு பெற்று போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு பரிசுக்கிண்ணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

எமது பாடசாலை மாணவர்கள் மேலதிகமாக அவர்களது விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதற்கேற்ற வகையில் ஓர் உதைபந்தாட்டக் குழு ஒன்றையும் ஆரம்பித்து வைத்துள்ளோம். இவ்வுதைப்பந்தாட்டக் குழுவிற்கான பயிற்சிகள் ஒவ்வொரு வாரவிடுமுறைகளில் சிறந்த பயிற்சியாளர்களால் வழங்கப்படுகின்றன.



எமது கழகம் தமிழ்ப் பாடசாலை மண்டபத்தில் நன்கு சிறந்த பயிற்றுவிப்பாளரால் யோகா வகுப்புக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 6.30 மணிமுதல் பெற்றோர்களுக்கு நடாத்தப்பட்டு வருகின்றன. எமது பாடசாலையில் ஒரு நடமாடும் நூல்நிலையும் ஒன்றை ஆரம்பித்து நான்கு ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் சிறிய வகுப்பு மாணவர்களுக்கான வாசிப்புப் பயிற்சியை ஊக்குவிக்க பல சிறிய வாசிப்புப் பயிற்சி புத்தகங்களும் வரவழைக்கப்பட்டு அந்தத்திட்டம் வெற்றிகரமாக கடந்த ஆண்டு பங்குனி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு மாணவர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

எமது தமிழ்ப்பாடசாலை வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுவதற்கான முக்கிய காரணம் பிள்ளைகள் கிரமமாகத் தமிழ்ப் பாடசாலைக்கு வரவேண்டும் என்ற நல்ல நோக்கமே. அத்துடன் மாணவர்களுக்கு தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம், நேரக்கட்டுப்பாடு என்பவற்றையும் பயிற்றுவித்து வருகின்றோம்.



©Essex Tamil Society 2023