Essex Tamil Society - எசெக்ஸ் தமிழ்க் கழகம்
  • Home
    • About Us
  • Coming Up Events
  • TAMIL SCHOOL
  • Fine Arts
  • Yoga
  • Contact Us
தமிழ்ப் பாடசாலையும் தமிழ் மொழியும்

புலம்பெயர்ந்த மண்ணிலே குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் நமது பிள்ளைகளின் தமிழ் அறிவை வளர்ப்பதற்கென்று பல தமிழ்ப் பாடசாலை கள் அதுவும் ஒரே பகுதிகளில் பல தமிழ்ப் பாடசா லைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தமிழ்ப் பாடசாலைகள் ஏன் தேவை என்ற கேள்வி கேட்போர் பலர் இருக்கின்றனர். இப் புலம் பெயர் மண்ணிலே தமிழ் படிப்பதால் என்ன இலாபம் என்று கேட்போர் அதிலும்அதிகம். இவர்களின் கேள்விகளுக்கு விடை சொல்வதானால் அவர்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தமிழ்ப் பாடசாலைகள் கட்டாயம் தேவை என்பதும் தமிழ்படிப்பதால் இலாபம் என்பதுவுமே. நாம் தமிழர்கள்தானே எண்று எண்ணும் பெற்றோர்கள் தமது ஆங்கிலத்தை தமது பிள்ளைகளிடம் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக வீட்டிலேயும் தமது பிள்ளைகளுடன் ஆங்கிலத்தி லேயே கதைத்துக் கொள்வதால் பிள்ளைகள் தமிழே தெரியாமல் வளர்கிறார்கள். அப்படியானவர் களுக்குத் தமிழ்ப்பாடசாலை தேவையில்லைத்தான். புலம்பெயர் மண்ணில் தமிழ் படிப்பதால்தான் நமது கலை,கலாச்சாரம்,மொழியறிவு என்பன பிள்ளைகளுக்கு ஏற்படுகின்றன. அதுமட்டுமல்ல ஆங்கிலப் பாடசாலைகளில் பயிலாத பல விடயங்களை தமிழ்பாடசாலைகளில் பிள்ளைகள் பயில்கிறார்கள் என்பது உண்மை.  ஆனால் சில பெற்றோர்களோ பிள்ளைகளை தமிழ்ப்பாடசாலைக்கு அனுப்புவதோடு அவர்களது கடமை முடிந்து விட்டது என்றும் பிள்ளைகள் தமிழ்ப் பாடசாலையில் படிப்பதை மீட்டல் செய்வதற்கு உதவி செய்யாமல் இருப்பது முறையாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குத் தண்டனை தருவதாக அமைகின்றது. 
ஏட்டுச் சுரைக்காய்

படிப்பு வேறு; புத்திசாலித்தனம் வேறு! கற்ற அறிவை ஆக்க பூர்வமான வழியில் செலுத்துகின்ற பொழுதுதான் புத்திசாலித்தனம் தென்படம். படித்தவர்களில் சிலர்,அறிவுபூர்வமாகச் செயல் படத் தயங்குகின்றனர். நம்முடையகல்விமுறை கூட சுயசிந்தனையைத் தூண்ட மறுக்கின்றது. நாம் கல்வி போதிக்கும் பொழுது உதாரணமாகக் குழந்தையிடம் “ரோஜா அழகான மலர்” என்று சொல் லிக் கொடுக்கின்றோம்.  குழந்தைகள் அதை நம்பத் தொடங்கி விடுகின்றனர். சாதரணமாக ஒரு குழந்தையிடம் சில  அழகான ரோஜா மலர்களையும் சில அழகில்லாத ரோஜா மலர்களையும் கொடுத்து இவற்றில் அழகாக உள்ள ரோஜாப் பூக்களைப் பொறுக்கி எடுக்கச் சொன்னால்,அது சுயமாகச் சிந்தித்து நன்றாக இல்லாத மலர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு நன்றாக இருக்கின்ற பூக்களையெல்லாம் தேர்ந்து எடுத்துக் கொடுக்கும்.  அதை விட்டு விட்டு ரோஜா ஓர் அழகிய மலர் என்கிற கருத்தை, அந்தக் குழந்தை மனதில் பாடம் என்ற பெயரால் திணித்துவிட்டு அதன் பிறகு அந்தக் குழந்தையிடம் ஓர் அழகில்லாத ரோஜாவைக் காட்டினால் கூட அதுவும் அழகாக இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும். ரோஜா அழகான மலர் என்ற கருத்தை முன்பே அந்தக் குழந்தை மனதில் பதிய வைததிருக்கின்றோம்.இன்று நம் பள்ளிகளில் நடைபெறுவது என்ன? முன்பே தயாரிக் கப்பட்ட அறிவைப் பிள்ளைகளக்குத் திணிக்கின்றோம். அவர்களைச் சொந்த மாகச் சிந்திக்க விடுவதில்லை. கல்லூரிகளிலும் இதே நிலைமை தான். அவர்களுக்கு அறிவு தொடர்ந்து ஏற்றப்பட்டாலும், புத்திசாலித்தனம் மழுங் கிக் கொண்டே போய்விடுகிறது. அறிவு வேறு: புத்திசாலித்தனம் வேறு: நிறையப் படித்துவிட்டு, நடை முறை வாழ்க்கையில் தடுமாறுகிறவர்களைப்  பார்க்கின்றோம். எல்லோரோடும் ஒத்துப் போவதற்கு,அவன் வாங்கிய பட்டம் உதவி செய்வதில்லை. செய்திகளை நிறையத் தெரிந்து வைத்திருக்கின்ற சிலர் நடைமுறை வாழ்க்கையில் சுயசிந்தனை இல்லாததால் படித்த முட்டாளாகக் காட்சி தருகிறார்கள். பிறர் தாயாரித்துத் திணித்த அறிவு ஏராளமாக உள்ளது. ஆனால் புத்தி இல்லை. படிக்கின்ற மாணவர்கள் பிறர் தயாரித்துத் திணிக்கின்ற அறிவை மட்டும் நம்பி, அதுவே போதும் என்று இருந்து விடக்கூடாது. சுய அறிவை வளர்ப்பதுதான் புத்திசாலித்தனம். வீட்டிலே குழந்தைகளை வளர்க்கும் பொழுதுகூட அவர்களின் சுய வளர்ச்சிக் குத் தடைகள் இல்லாத வகையில் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு விடயத்தையும் குழந்   தைகளே உற்று நோக்கிக் கற்றுககொள்ளும் சந்தர்ப்பங்களை உருவாக்கித் தரவேண்டும். தானாக நடக்கும் குழந்தை தடுமாறி விழுந் தாலும் மீண்டும் விழாமல் எழக் கற்றுக் கொள்ளும். சுயமுயற்சி வளரும்.


©Essex Tamil Society 2023